சீனாவிற்கு சவால் விடுத்த நான்சி பெலோசி!
தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் செல்வதை சீனாவால் தடுக்க முடியாது என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தெரிவித்துள்ளார்.
ஆசிய சுற்றுப் பயணத்தின் இறுதியாக ஜப்பான் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தனது பயணம் தைவான் தீவை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் இல்லை என்றும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டும் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தைவான் வளர்ச்சிக்கு அமெரிக்கா அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் எனக் குறிப்பிட்ட நான்சி பெலோசி(Nancy Pelosi), சீனாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் மீறல், ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனைகளையும் விமர்சித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.