பிரதமர் பதவியை இராஜினாமா செய்த நரேந்திர மோடி!
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த நரேந்திர மோடி, 3வது முறையாக வரும் சனிக்கிழமை (8-06-2024) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகின.
இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன.
இருப்பினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது.
அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது.
இந்த நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
இதற்காக இன்றையதினம் பாஜக கட்சி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை நரேந்திர மோடீ இராஜினாமா செய்துள்ளார்.
மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார்.
டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது.
17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
இதேவேளை, புதிய அரசு அமையும் வரை நரேந்திர மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.