சுட்டெறிக்கும் சூரியனுக்கு மிக அருகில் சென்ற நாசாவின் பார்க்கர் விண்கலம்!
பார்க்கர் விண்கலம் தற்போது சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக நாசா, கடந்த 2018-ம் ஆண்டு 'பார்க்கர் சோலார் புரோப்' (Parker Solar Probe) என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பியது.
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் அதீத வெப்பம், சூரிய புயல் மற்றும் சூரிய துகள்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் நோக்கில் இந்த விண்கலம் செலுத்தப்பட்டது.
தினத்தந்தி டிசம்பர் 27, 10:17 pm Text Size நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது.
Parker Solar Probe has phoned home!
— NASA Sun & Space (@NASASun) December 27, 2024
After passing just 3.8 million miles from the solar surface on Dec. 24 — the closest solar flyby in history — we have received Parker Solar Probe’s beacon tone confirming the spacecraft is safe. https://t.co/zbWT7iDVtP
சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் வரை பார்க்கர் விண்கலம் சென்றுள்ளது.
மனித வரலாற்றிலேயே இதுவரை சூரியனுக்கு இவ்வளவு நெருக்கமாக சென்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் என்றால் அது இந்த விண்கலம்தான்.
அந்த விண்கலத்தில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.