என்டிபி, லிபரல் தலைவர்கள் பதவி விலகல்!
ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆண்ட்ரியா ஹோர்வத் (Andrea Horwath) அறிவித்துள்ளார்.
மாகாண சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், ஹமில்டன் மாநாட்டு மையத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேவேளை, தேர்தல் தோல்வியை அடுத்து, லிபரல் கட்சியின் தலைவர் ஸ்டீவன் டெல் டுகா (Steven Del Duca) கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2018 தேர்தலில், வாகன்-வூட்பிரிட்ஜ் (Vaughan-Woodbridge) தொகுதியை இழந்த டெல் டுகா (Steven Del Duca) , இம்முறையும், வெற்றி பெறத் பெறத் தவறிவிட்டார்.
மேலும் அவர் தனது சொந்த தொகுதியில் சுமார் 6 ஆயிரத்து 700 வாக்குகளால், (Steven Del Duca0 தோல்வியடைந்துள்ளார்.