அமெரிக்க வரி விதிப்பினால் கனடிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் கனடிய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய செலவு அதிகரிப்பினை வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனடாவில் உள்ள கிட்டத்தட்ட 40 சதவீத வணிக நிறுவனங்கள் அடுத்த ஒரு ஆண்டில் அமெரிக்க வரி கட்டணங்களால் ஏற்படும் செலவு உயர்வுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.
39.4 சதவீத வணிகங்கள் அடுத்த 12 மாதங்களில் அமெரிக்க வரி கட்டணங்களால் ஏற்படும் செலவு உயர்வுகளை அதிகளவில் அல்லது ஓரளவு நுகர்வோருக்கு பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.
இதற்கு மாறாக, 15.4 சதவீத கனடிய வணிகங்கள் இதேபோன்ற செலவு உயர்வுகளை நுகர்வோருக்கு பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை அல்லது ஓரளவு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளன.
மேலும், 27.2 சதவீத வணிகங்கள் அடுத்த 12 மாதங்களில் கட்டணங்களால் எந்த செலவு உயர்வையும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளன.