ரொறன்ரோவில் மோசடிகள் காரணமாக 400 மில்லியன் டாலர் இழப்பு
கனடாவின் ரொறன்ரோவில் கடந்த ஆண்டில் மோசடிகள் காரணமாக சுமார் 400 மில்லியன் டாலர்களை மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை பல்வேறு மடங்குகளினால் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மோசடியில் சிக்கிய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மாதம் மோசடிகளை தவிர்க்கும் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு சுமார் 400 மில்லியன் டாலர் பெறுமதியான மோசடி சம்பவங்கள் ரொறன்ரோவில் இடம் பெற்றுள்ளன.
ரொறன்ரோவில் சுமார் 17,000 மோசடி சம்பவங்கள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய வழியிலான மோசடி சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிப்டோ கரன்சி, பிரமிட் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் மோசடியில் சிக்கியவர்கள் வெட்கம் காரணமாக இந்த மோசடிகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என ரொறன்ரோ பொலிஸ் பிரிவின் நிதிக் குற்றவியல் புலனாய்வு அதிகாரி டேவிட் கொபி தெரிவித்துள்ளார்.