ஹமாஸ் இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை தோல்வி!
எகிப்தியத் தலைநகர் கைரோவில் ஹமாஸ் தலைவருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அது பற்றிய அதிகாரத்துவத் தகவல் இல்லை.
ஒரு வாரம் சண்டையை நிறுத்துவதாகவும் அதற்குப் பதில் பிணையாளிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் கேட்டுக்கொண்டதை ஹமாஸ் நிராகரித்துவிட்டதாக Wall Street Journal சொல்கிறது.
2 தரப்புகளும் இடையே வெளியே அறிவிக்கப்படும் நிலைகளில் மிகப்பெரிய முரண்பாடு தெரிகிறது.
பிணையாளிகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் போர் முடிந்தாக வேண்டும் என்கிறது ஹமாஸ்.
ஆனால் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) ஹமாஸ் முடிந்தால்தான் போர் முடியும் என்கிறார்.
ஹமாஸ் வசம் இன்னும் சுமார் 130 பிணையாளிகள் உள்ளனர்.