உலகை உலுக்கிய நேபாள பேரழிவு ; 1204 பேர் மரணம்; 4200 பேரை காணவில்லை
திபெத் - நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 1204 பேர் பலியாகிவிட்ட நிலையில் 4200 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் இந்த பேரழிவில், ஆற்றில் இருந்த கல், மண், சேறு, பாறை மற்றும் ஆற்றோரத்தில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் அந்த வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு சென்றது.

சகதியுடன் பல அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் யாராலும் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பாலங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளும் அதில் அடித்து செல்லப்பட்டன.
இந்த இயற்கை பேரழிவில் இதுவரை 1204 பேர் பலியாகிவிட்ட நிலையில் 4200 மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னிலையில் இதுவரை 12, ஆயிரம் பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.