ரஷ்யாவில் பொலிஸாரை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்து நபருக்கு நேர்ந்த கதி!
ரஷ்யாவில் பொலிஸாரை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்தை சேர்ந்த ஹெரி ஜானிஸ் வென் ஹுர்டன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ரஷ்யாவில் வசித்து வந்த நெதர்லாந்தை சேர்ந்த ஹெரி ஜானில் வென் ஹூர்டன் என்பவர் கடந்த ஓக்டோபர் மாதம் மாஸ்கோவில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு வைக்கப்பட்டிருந்த பலகையை உடைத்ததாக ஹெரியிடம் ரஷ்ய பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ரஷ்ய பொலிஸாரை ஹெரி கீழே தள்ளிவிட்டார். மேலும், அவரது முகத்தில் தாக்கினார்.
இதையடுத்து, ஹெரியை கைது செய்த ரஷ்ய பொலிஸார் அவரை மாஸ்கோவில் வீட்டு காவலில் வைத்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பொலிஸாரை கீழே தள்ளிவிட்ட வழக்கில் ஹெரி ஜானிசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் ரஷ்யா, நெதர்லாந்து இடையேயான உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.