ஒன்றாரியோவில் மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் அதிகரிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாண மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் கடந்த 2024ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் 57 மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்து மரணங்களின் எண்ணிக்கை உயர்வு 2025ம் ஆண்டிலும் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதி திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு காப்புறுதி திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கட்டாயமாக வழங்கப்படும் பல நலன்கள் இனி விருப்பத்தேர்வாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.