சுவிற்சர்லாந்தில் அறிமுகமாகும் புதிய சட்டம் ; மீறினால் கடும் சட்ட நடவடிக்கை
சுவிற்சர்லாந்தில் இரண்டாயிரம் சுவீஸ் ப்ராங்கு வரைக்கும் அபராதம் விதிக்கக் கூடிய வகையில் புதிய கட்டுப்பாட்டு வாகனப்போக்குவரத்து விதி ஒன்று நீதிமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 வருடங்களுக்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கைகள்
அதாவது, A1 நெடுஞ்சாலைகளில் நீண்டதூர போக்குவரத்து வாகனங்கள் பேருந்துகள். தனியார் சொகுசு வாகனங்கள் நிறுத்துவதற்கு சில சேவை நிலையங்கள் உண்டு.
இந்த சேவை நிலையங்களில் உள்ள வாகன தரிப்பிடங்களில் உங்களது சொந்த சொகுசு வாகனங்களை நிறுத்தினால் அங்கு தரித்திருக்கும் ஏனய வாகனங்களுக்கு உண்டாகும் அசௌகரியங்களைப்போறுத்து அதில் உங்களுடைய குற்றத்துக்கு ஏற்ப்பஅதிகூடிய தண்டனையாக இரண்டாயிரம் சுவீஸ் ப்ராங்கு வரைக்கும் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த காலங்களில் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கபட்ட போதிலும் அவற்றை கண்டுகொள்ள தவறும் சாரதிகளுக்கு இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்வதால் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் குறித்த இடத்தில் உங்களுடைய சொந்த வாகனங்களை கட்டுப்பாடுகளைமீறி நிறுத்தினால் கண்டிப்பாக புதிய அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கயில் குறிப்பிடப்பட்டுள்ளது.