பிரான்சில் வந்தது புதிய மருத்துவ செயலி
பிரான்சில் மருத்துவ தகவல்கள் அடங்கிய புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் Olivier Véran இதனை இன்று பெப்ரவரி 3 ஆம் திகதி, வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார். “கணினி மையப்படுத்தப்பட்ட சுகாதார தரவுகளை கையாள பிரெஞ்சு மக்கள் தயாராகிவிட்டனர்.” என தெரிவித்த சுகாதார அமைச்சர்… Mon espace santé’ எனும் புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியானது மக்களுக்கு பயனுள்ளதாகவும், ஒவ்வொருவரின் சுகாதார தரவுகளை பாதுகாப்பாக ஒரே இடத்திலும் சேமிக்கப்படும் என அவர் தெரிவித்தார். குறித்த செயலியினை பிரெஞ்சு நிறுவனம் ஒன்றே தயாரித்துள்ளது.
மேலும் இதில் பெறப்படும் தரவுகள் அனைத்தும் அமைச்சகத்தினால் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.