பிரிட்டனின் புதிய சட்டம்... லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்
பிரிட்டனில் புலம்பெயர் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் புதிய சட்டத்திற்கு எதிராக லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்து, அதன் பின்னர் புகலிடம் கோரும் நடவடிக்கையை ரிஷி சுனக் அரசாங்கம் மொத்தமாக ஒழிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், சிறு படகுகளில் மேற்கொள்ளப்படும் ஆபத்தான பயணம் முடிவுக்கு வந்த பின்னர், புதிய வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ரிஷி சுனக் அரசாங்கம் கூறுகிறது.
இந்த நிலையில், மனிதர்கள் எவரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல என வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளுடன் சுமார் 2,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் அருகாமையில் திரண்டனர்.
அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற, சட்டவிரோத புலம்பெயர் பிரேரணைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானிய மக்கள் பண்பானவர்கள், அதனாலையே, பயங்கரமான சூழ்நிலைகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களுக்கு அவர்கள் தங்கள் ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
மனிதர்கள் எவரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல, அவர்களின் சூழ்நிலை அப்படியான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படியானவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, லண்டனில் மட்டுமின்றி, கிளாஸ்கோ மற்றும் வெல்ஷ் ஆகிய பகுதிகளிலும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் சிறு படகுகளில் சுமார் 45,000 மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் UNICEF அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.