அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு ட்ரம்பின் புதிய திட்டம்
சட்டவிரோத குடியேறிகள், வணிக லொரிகளை ஓட்டுவதற்கான, 'லைசென்ஸ்' பெறுவதை தடுக்கும் வகையில் 'டெலிலா' என்ற பெயரில் புதிய சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவில், சட்டவிரோத குடியேறிகள் ஓட்டும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

கடந்த 2024ல் இந்தியர் ஒருவர் ஓட்டிச் சென்ற18 சக்கர வணிக லாரி மோதியதில், டெலிலா கோல்மேன் என்ற 7 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
ட்ரம்ப், நாட்டில் 'டெலிலா சட்டம்' எனும் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆங்கிலம் பேசத் தெரியாத, சாலை விதிகளை படிக்க முடியாத சட்டவிரோத குடியேறிகளால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
இதனால், எந்த மாகாணமும் சட்டவிரோத குடியேறிகளுக்கு வர்த்தக டிரைவர்ஸ் லைசென்ஸ் வழங்கக்கூடாது, என்று வலியுறுத்தினார்.