உலகில் முதன் முறையாக கடுமையான சிகிச்சை செய்து சாதனை படைத்த லண்டன் மருத்துவர்கள்!
பிரித்தானியாவில் உள்ள சோமட்செட்டில் வசித்து வரும் ஜஸ்டின் என்பவரின் 13 வயதான ஓரான் நோல்சன் என்ற மகன் 3 வயதில் இருந்து தீராத கை,கால் வலிப்பு நோயால் பாதிக்கபட்டு வந்துள்ளனர்.
இந்த நோயால் நாளாந்தம் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அடிக்கடி சுய நினைவு இல்லாமல் சென்று விடுவார். மூச்சு விடவும் சிரமப்பட்டார். எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் இரவு தூங்கும் போதும் யாராவது ஒருவர் ஓரானை அருகில் இருந்து கண்காணித்தபடி இருக்க வேண்டும்.
மகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததை பார்த்து அவரது தாய் வேதனை அடைந்தார்.
பல இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவ மனையில் ஓரான் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் குழுவினர் அறுவை சிசிச்சை செய்து நியூரோ ஸ்டிமுலேட்டர் என்ற வலியை குறைக்கும் புதிய சாதனத்தை பொருத்த முடிவு செய்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் சிறுவன் ஓரானுக்கு மருத்துவர் குழுவினர் மிகவும் சவாலான இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்த சிகிச்சை மூலம் 3.5 சென்டிமீட்டர் சதுரமும், 0.6 செ.மீ. தடிமனும் கொண்ட புதிய சாதனத்தை மண்டை ஓட்டில் பொருத்தினார்கள்.
சிறுவனின் மண்டை ஓட்டில் உள்ள ஒரு இடைவெளியில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சுமார் 8 மணித்தியாலங்கள் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனம் மூளையுடன் தொடர்பில் இருந்து வலியை குறைக்கும் வகையில் இயங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலகில் முதல் முறையாக இந்த ஆபரேஷனை செய்து லண்டன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது சிறுவன் ஓரான் நன்றாக குணம் அடைந்து வலி குறைந்து மகிழ்ச்சியாக இருந்து வருவதாக அவரது தாய் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறும் போது,
போது 6 மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கு இப்படி ஒரு மாற்றம் வரும் என நான் கனவில் கூட நினைக்க வில்லை.
புதிய சாதனம் மூலம் என் மகன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். எல்லோரிடமும் அரட்டை அடித்து வருகிறான். இனிமேல் எங்களுக்கு கவலை இல்லை. அவனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.