வரிவிதிப்பை எதிர்கொள்ள சீனாவில் புதிய வர்த்தக பிரதிநிதி நியமனம்
அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் சீனா திடீரென ஒரு புதிய வர்த்தக பிரதிநிதியை நியமித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளை எதிர்கொள்ள சீனா ஏற்கனவே 48 புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள வரிகளால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமையினாலேயே இந்த நடவடிக்கையை சீனா முன்னெடுத்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனா 5.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தாலும், புதிய சூழ்நிலையை எதிர்கொண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற எச்சரிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.