உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவலை அறிவித்த கனடா
கனடா அரசின் தளர்த்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மார்ச் 2020ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்க பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினால் கனடாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மட்டுமின்றி, பைஸர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனகா, மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக போட்டுக்கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க உள்ளனர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவர்களையும் ஆகஸ்ட் 9 முதல் கனடாவுக்குள் அனுமதிக்கின்றனர்.
மட்டுமின்றி, திங்கள்கிழமை முதல், சர்வதேச விமானங்கள் மீண்டும் ஹாலிஃபாக்ஸ், கியூபெக் சிட்டி, ஒட்டாவா, வின்னிபெக் மற்றும் எட்மண்டன் ஆகிய இடங்களில் தரையிறங்க அனுமதிக்கப்படும்.