மலேசியாவில் புதிய வகை கொரோனா! 6,000 மாணவர்கள் பாதிப்பு

COVID-19 World Health Organization Malaysia Influenza
By Sulokshi Oct 16, 2025 06:29 AM GMT
Report

  மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மலேசியாவில் அண்மையில் எக்ஸ்.எப்.ஜி. (XFG) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.

மலேசியாவில் புதிய வகை கொரோனா! 6,000 மாணவர்கள் பாதிப்பு | New Type Of Corona In Malaysia Influenza

 கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza)

இந்த கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza) பாதிப்பும் பலரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மர்ம காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 14 ஆக இருந்த நிலையில், தற்போது 97 கொத்தணிகளாக (Clusters) அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இணைய வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் புதிய வகை கொரோனா! 6,000 மாணவர்கள் பாதிப்பு | New Type Of Corona In Malaysia Influenza

முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

மேலும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு நிலைமை கையாளப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சகம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த கொரோனா வைரஸை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய ஒரு வகையாக வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US