நியூயார்க் வீதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வீதியில் தனியாக நடந்துச் சென்ற 45 வயது பெண்ணை சென்று பெல்ட்டால் கழுத்தை நெருக்கி இழுத்துச் சென்று காருக்குப் பின்னால் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1ம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். உயிருக்குப் போராடிய அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த நபர் முகத்தை மறைத்து இருந்ததால் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை என தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை தேடி வருகின்றனர்.