நியூஸிலாந்தில் சமூக ஊடகச் சவாலால் பறிபோன உயிர்
நியூஸிலாந்தில் சமூக ஊடகச் சவாலால் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். ரக்பி விளையாட்டைப் போன்று எதிர் எதிரே வேகமாக ஓடிவந்து முட்டிக்கொள்ளும் அந்தச் சவால் நியூஸிலந்திலும் ஆஸ்திரேலியாவிலும் பிரபலமாகியுள்ளது.
அதில் பங்கெடுப்பவர்கள் பாதுகாப்புக் கவசம் ஏதும் அணிந்துகொள்வதில்லை. "Run-it-straight" என்கிற அந்தச் சவாலில் 19 வயது இளைஞன் ஒருவர் நண்பர்களுடன் ஈடுபட்டார்.
இதன்போது தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் இளைஞன் உயிரிழந்ததாக நியூஸிலந்து பொலிஸார் கூறியுள்ளனர். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோர் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை நியூஸிலாந்தில் "Run-it-straight" போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குப் பல்லாயிரம் டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.