2027-ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை! புதிய கட்டுப்பாட்டை விதித்த நியூசிலாந்து
New zealand
By Kishanthini
நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதனடிப்படையிலே அந்நாட்டு சுகாதாரத்துறை இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027-ல் 14 வயதை எட்டும் அனைவருக்கும், நிரந்தரமாக சிகரெட் விற்க தடை விதிக்கப்பட உள்ளது.
இதன், மூலம் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும், என அந்நாட்டு சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆயிஷா வெரால் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US