கனடாவின் பண வீக்கம் குறித்து வெளியான தகவல்
கனடாவின் பணவீக்க நிலைமைகள் சாதகமான நகர்வினை நோக்கி பயணிப்பதாக மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
கனடிய மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு வீதமளவில் பேணும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தமது இலக்கினை எட்டக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகள் காலப்பகுதியில் முதல் தடவையாக கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடிய நிதிக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றமாக இந்தத் தீர்மானம் கருதப்படுகிறது.
எவ்வாறு எனினும் வேலையற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பாதிவாகியுள்ளதுடன் கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 4.8 வீதமாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்க வீதம் 2.7 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கத்தை 2 வீதமாக பேணும் அதேவேளை, வேலையற்றோர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கும் வகையிலான முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுனர் மெக்லம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 2.வீதமாக காணப்பட்டதாகவும், மே மாதம் 2.9 வீதமாக காணப்பட்டதாகவும் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.