இத்தாலியில் A.I. தொழில்நுட்பத்தில் நாளிதழ்; ரஷ்ய அதிபர் புடினும், 10 துரோகங்களும்!
இத்தாலியில் முழுக்க முழுக்க A.I. தொழில்நுட்பத்தில் நாளிதழ் வெளியாகியுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
மனிதர்கள் பல மணி நேரம் சிந்தித்து செய்யக்கூடிய பணிகளை நொடிகளில் செய்து அசத்துகிறது A.I.
ரஷ்ய அதிபர் புடினும், 10 துரோகங்களும்
இந்நிலையில் இத்தாலியில் இருந்து வெளியாகும் இல் போக்லியோ, நாளிதழ் நிறுவனம் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திவ் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நாளிதழின் ஆசிரியர் கூறுகையில்,
இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்தியை சொன்னால் மட்டும் போதும், மற்றதையெல்லாம் அது பார்த்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் பக்கத்தில் ரஷ்ய அதிபர் புடினும், 10 துரோகங்களும் எனத் தலைப்பிட்டும் டிரம்ப்பை கிண்டலடித்தும் தலைப்புகளை ஏ.ஐ. சுவாரசியமாக வைத்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவெனில், செய்தித்தாள் முழுவதிலும் ஒரு இலக்கணப் பிழை கூட இல்லை என்பதுதான். அதேவேளை கணினித் துறை மட்டுமின்றி கல்வி, மருத்துவம், ராணுவம் என எல்லா துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.