அமெரிக்காவின் அடுத்த அதிபர் தொடர்பில் புடின் வெளியிட்ட பகிரங்க கருத்து!
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாஸ்கோவிற்கு நல்லது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை விட பைடன் நம்பகமானவர் என்று புடின் பாராட்டியுள்ளார்.
பைடன் மிகவும் அனுபவம் வாய்ந்த, கணிக்கக்கூடிய நபர்.
ஆனால், அமெரிக்க மக்களால் நம்பப்படும் அமெரிக்காவின் எந்தத் தலைவருடனும் நாங்கள் பணியாற்றுவோம், ”என்று புடின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இருவரில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு கேட்டபோது கூறியுள்ளார்.
அவர் டொனால்ட் டிரம்பை விட அனுபவம் வாய்ந்தவர் என்று விவரித்தார்.
புடினின் கருத்துக்கள் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிய அவரது முதல் கருத்துகளாகும்.