இங்கு செல்லாதீர்கள்; அமெரிக்கா, பிரித்தானியா , கனடா மக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாட்டு பிரஜைகள், நைஜர் நாட்டிற்குப் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நைஜரில் நிலவும் அரசியல்மற்றும் தீவிரவாதம், கடத்தல் நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, நைஜரில் உள்ள தனது தூதரகத்தின் ஆதரவைப் பெற முடியாது எனவும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் அறிவித்தது.

அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்
அந்த நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கனடா மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்களுக்கு “அதிக அபாயம் உள்ள நாடு” என நைஜரை வகைப்படுத்தி, அவசர தேவையின்றி பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.
இந்த எச்சரிக்கைகள், நைஜரின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. அதேவேளை நையர் செல்லும் பயணிகள், தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து, அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.