கனடாவில் சீக்கிய ஆன்மீகத் தலைவரின் கொலையுடன் தொடர்புடைய சிலர் கைது
கனடாவில் சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டீப் சிங் நிஜார் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட கூலிப் படையொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கூலிப் படையினால் வேறும் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் எட்மோன்டனில் 11 வயது சிறுவன் மரணத்திலும் இந்தக் குழுவிற்கு தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கமால்பிரீட் சிங், கரான்பிரீட் சிங் மற்றும் கரான் பரார் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.