வான்கூவரில் ஒன்பது பேர் அதிரடியாக கைது
மெட்ரோ வான்கூவர் மற்றும் வான்கூவர் தீவில் மூன்று முக்கிய பாதைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிடப்பட்ட இந்த போராட்டம் காலை 6 மணிக்கு முன்பே தொடங்கியது, சுமார் ஒரு டஜன் ஆர்வலர்கள் பாட் பே நெடுஞ்சாலையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டானர்.
அத்துடன், ஸ்வார்ட்ஸ் பே டெர்மினலுக்குச் செல்லும் படகு போக்குவரத்து உட்பட வடக்குப் போக்குவரத்தையும் அவர்கள் நிறுத்தினர். காலை 7 மணியளவில், எதிர்ப்பாளர்கள் தெற்கு நோக்கிய மாசி சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலைத் தடுத்ததுடன், ரிச்மண்ட் மற்றும் டெல்டா இடையே நெடுஞ்சாலை 99 இல் போக்குவரத்தைத்யும் அவர்கள் முடக்கியிருந்தனர்.
அதுமட்டுமல்லாது ட்சாவாசென் படகு முனையத்திற்குச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், வான்கூவர் மற்றும் நார்த் ஷோர் இடையே உள்ள பாலத்தின் மேற்குப் பாதைகளையும் எதிர்ப்பாளர்கள் குறிவைத்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நெரிசல் காரணமாக தாமதம் நீடித்தாலும், போராட்டங்கள் பொலிஸாரால் கலைக்கப்பட்டது.
அதேசமயம் வான்கூவரில், பாலத்தின் மேல்தளத்தில் காருக்குள்தங்களைப் பூட்டிக்கொள்ள முயன்ற நான்கு பேர் உட்பட ஐந்து எதிர்ப்பாளர்களை பொலிசார் கைது செய்தனர். அத்துடன் , பாலத்தின் அருகே போராட்டக்காரர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கைதான அனைவர் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தொடர திட்டமிட்டுள்ளதாக RCMP ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.