நில அதிர்வினால், கனடாவின் ஒன்றாரியோவில் ஏற்பட்ட பாதிப்பா?
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தின் பஃப்லோ பிரதேசத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக தென் அன்றோரியோ பகுதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நில அதிர்வு சிறிதளவில் உணரப்பட்டாலும் பாதிப்புகள் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய இயற்கை வளங்கள் நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதுஃ
இந்த நில அதிர்வு காரணமாக சொத்துக்களுக்கு சேதங்களோ உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுஃ
பஃப்லோபிராந்தியத்தில் நான்கு தசம் இரண்டு மேக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவானது.
இந்த நில அதிர்வானது பஃப்லோவிலிருந்து 97 கிலோ மீற்றர் தொலைவிலும், ஒன்றாரியோவின் ஹமில்டன் பகுதியிலிருந்து 101 கிலோ மீற்றர் தொலைவிலும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, துருக்கியில் நில அதிர்வு காரணமாக ஆரிய பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.