எதிரிகளின் ஆயுதங்களை ஹோர்முஸ் வழியாக கொண்டுசெல்ல அனுமதியில்லை ; ஈரான்
ஹோர்மூஸ் நீரிணை வழியாக எதிரிகளின் ஆயுதங்களை கொண்டு செல்ல நாங்கள் மீண்டும் அனுமதியளிக்க மாட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஈரானின் துணை ஜனாதிபதி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது,

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் எங்களுடைய இறையாண்மைக்கான உரிமையை நாங்கள் கைவிட்டு விட்டோம்.
இதற்கு முன்பு, இராணுவ தளபாடங்கள் இந்த வழியே செல்ல நாங்கள் அனுமதித்தோம். அவை எங்களுக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கம் கொண்டவை. ஆனால், மீண்டும் அதற்கு நாங்கள் அனுமதியளிக்க போவதில்லை என்றார்.
ஹோர்மூஸ் நீரிணை பகுதி வழியே செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஈரான் பரிசீலனை செய்து வருகிறது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர், இரு மாதங்களுக்கு முன்பு கூறினார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானிய பாராளுமன்ற தேச பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவின் தலைவர் இப்ராகிம் அஜிஜி நேற்று கூறும்போது, ஹோர்மூஸ் நீரிணை வழியே குறிப்பிட்ட பாதையில் கப்பல்கள் பயணிக்கும் வகையிலான இயக்க நடைமுறைகளை, அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளனர்.
அவை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். ஈரானால் நிர்வகிக்கப்படும் இந்த வழியில், எங்களுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் வர்த்தக கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் செல்ல அனுமதியளிக்கப்படும்.
இந்த போக்குவரத்து மேலாண்மை நடைமுறைக்கு ஈடாக, ஈரான் கட்டணம் வசூலிக்கும் என கூறினார். இந்த சூழலில், எதிரிகளின் ஆயுதங்களுக்கு அனுமதி இல்லை என ரெசா கூறியுள்ளார்.