கனடாவில் பாடசாலைகளில் பன்றி இறைச்சிக்கு தடையா?
கனடாவின் ஒன்டாரியோ மற்றும் பிற மாகாணங்களில் பாடசாலைகளில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டது என கூறிய டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இத்தகைய மின்னஞ்சல் அல்லது தடை உத்தரவு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உங்கள் குழந்தையின் ஆசிரியர், மற்ற மத மாணவர்களை புண்படுத்தக்கூடும் என்பதால், உங்கள் குழந்தையின் மதிய உணவில் பன்றி இறைச்சி வைக்க வேண்டாம் என்று மின்னஞ்சல் அனுப்புவதாக கற்பனை செய்யுங்கள் என டிக்டாக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. சில சமூக ஊடக பயனர்கள் இதை முஸ்லீம் மாணவர்களை கருத்தில் கொண்டு பன்றி இறைச்சி தடை என தவறாக பகிர்ந்தனர்.
ஆனால், கால்கரி கல்வி வாரியம் மற்றும் டொராண்டோ மாவட்ட கல்வி வாரியம் இரண்டும் இந்தக் கூற்றை முற்றிலும் மறுத்துள்ளன. இந்த வதந்தி குறித்து எங்களுக்குத் தெரியாது.
எங்களது பள்ளிகள் அக்டோபர் 6 முதல் ஆசிரியர் சங்க வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு எதை உணவாக கொண்டுவருவது என்பது அவர்களின் தீர்மானம்,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மாநிலத்தின் உணவு கொள்கை பள்ளிகளில் விற்கப்படும் உணவுகளுக்கே பொருந்தும். அதாவது, அதிக கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு உள்ள உணவுகளை பள்ளிகளில் விற்க முடியாது என்பதே விதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவு அல்லது பள்ளிக்குப் புறம்பாக வாங்கப்படும் உணவு குறித்து எந்தத் தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.