இனியாரும் கூட்டம் போட முடியாது; முக்கிய இடத்துக்கு தடைபோட்ட இலங்கை அமைச்சரவை!
காலி முகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அதன்படி பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மே தின கூட்டங்கள்
அதேவேளை பிரபல அரசியல் கட்சிகள், மே தின கூட்டங்களை கொழும்பை முன்னிலைப்படுத்தி கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் காலி முகத்திடல் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.