கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் போராட்டத்தில் குதிக்கும் சாத்தியம்
கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் குறிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தபால் ஊழியர்கள் மற்றும் கலைஞர் தபால் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பது குறித்து அதிகாரபூர்வமாக தீர்மானம் எதுவும் இருக்கவில்லை. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நான்காண்டு காலப்பகுதியில் 11.5 வீத சம்பள அதிகரிப்பு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
கனடிய தபால் திணைக்களம் இந்த யோசனையை முன் வைத்துள்ளது.
எனினும் தொழிற்சங்கங்கள் இந்த யோசனையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.