பனாமா கால்வாயைக் கடக்க அமெரிக்க கப்பல்களுக்கு கட்டணமில்லை
பனாமா கால்வாயைக் கடக்கும் அமெரிக்காவின் அரசாங்கக் கப்பல்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பனாமா, கப்பல்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பலமுறை சாடியதை அடுத்து அந்த அறிவிப்பு வந்துள்ளது.
1977இல் ஒப்பந்தம்
கால்வாயைத் தென் அமெரிக்க நாடான பனாமாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா 1977இல் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்நிலையில் பனாமா கால்வாயை மீண்டும் வசமாக்கிக் கொள்ளப்போவதாகத் டிரம்ப் மிரட்டினார்.
கால்வாயைப் பாதுகாக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது;அதனிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது அநியாயம் என்று திரு டிரம்ப்பின் நிர்வாகம் கூறியது.
இந்நிலையில் பனாமாவின் அறிவிப்பால் அமெரிக்க அரசாங்கத்துக்கு மில்லியன்கணக்கில் செலவு மிச்சப்படும் என வெளியுறவு அமைச்சு கூறியது.
மேலும் பனாமா கால்வாயைப் பாதுகாக்க பனாமாவுடன் மேலும் நெருக்கமாகப் பணியாற்றவுள்ளதாகவும் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு சொன்னது.