அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா Maria Corina Machado தேர்வு! டிரம்ப்பிற்கு ஏமாற்றம்!
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
டிரம்ப்பிற்கு ஏமாற்றம்
அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.
அடுத்த வருடமேனும் அவருக்கு இந்த பரிசு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.