கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ்
கனடாவில் நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக வேகமாக நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வயிற்றுவலி, வாந்தி, தசைபிடிப்பு மற்றும் வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்த் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் நோரோ வைரஸ் தாக்கத்தின் பாதிப்பு அதிகமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மற்றும் அல்பேர்ட்டா மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அமெரிக்காவின் ஒஹியோவின் நோர்வால்க் பகுதியில் முதன் முறையாக இந்த வைரஸ் தாக்கம் பரவிய காரணத்தினால் நோரா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட விசேட சிகிச்சை முறைமைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.