தென்கொரியாவிற்கு குப்பைகளை அனுப்பிய வடகொரியா
தென்கொரியாவிற்கு வடகொரியா பலூன்கள் மூலம் குப்பைகளை அனுப்பி வைத்துள்ளது.
நூற்றுக்கணக்கான பலூன்கள் இவ்வாறு குப்பைகளுடன் தென்கொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 240 குப்பைகளின் நிறைந்த பலூன்கள் தமது எல்லை பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் கூட்டுப் படைகளின் பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார்.
இந்த குப்பைகள் தொடர்பில் கண்டறிவதற்காக ரசாயன மற்றும் வெடி பொருட்கள் தொடர்பான ஆய்வுக் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பலூன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பலூன்கள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து வடகொரிய மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அநேகமான பலூன்கள் தென்கொரிய எல்லை பகுதி மாகாணத்தில் வீழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வடகொரியாவிற்கு இவ்வாறான பலூன்களை அனுப்பி வைப்பதாக வடகொரியா குற்றம் சுமத்தி இருந்தது.
வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கொண்ட யுஎஸ்பிகள் போன்றன இந்த பலூன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக வடகொரியா பல்வேறு குப்பைகள் உள்ளடக்கிய பலூன்களை தென்கொரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை, வடகொரியா சர்வதே சர்வதேச சட்டங்களை மீறி செயல்படுவதாகவும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்களை உடன் நிறுத்துமாறு வடகொரியாவிடம் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.