வடகொரியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
வடகொரியாவில் கொரோனா தொற்று பரவால் உணவுப் பற்றாக்குறை கடுமையாகியுள்ளதாக கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இதுவரை வடகொரியாவில் பட்டினிச்சாவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடகொரியர்கள் பட்டினியால் உயிரிழப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விலை அதிகமாக இருந்தாலும் வடகொரியச் சந்தைகளில் இன்னமும் உணவு தானியங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
பொருத்தமான வேளாண் கொள்கையை உருவாக்கும் மிக முக்கியக் குறிக்கோளுடன் நாட்டின் மூத்த தலைவர்கள் விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நீண்ட காலமாக வடகொரியாவைப் பாதித்துள்ள உணவுப் பற்றாக்குறைப் பிரச்சினை தொடர்பில் புதிய கவலை எழுந்துள்ளது.
1990-களின் மத்தியில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் நூறாயிரக்கணக்கான வடகொரியர்கள் உயிரிழந்துள்ளனர்.