உலகை அச்சுறுத்தும் வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை; அமெரிக்கா எடுத்த நடவடிக்கை

America France Russia Ukraine Norway North Korea War Ireland Missile Test Albania
By Sulokshi Mar 26, 2022 04:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  வடகொரியாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில் , சீனா மற்றும் ரஷியா இந்த நடவடிக்கையில் ஆர்வம் காட்டவில்லை.

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் இது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதிநிதிகள், வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க பிரிட்டன் சம்மதம் தெரிவித்துள்ள அதேவேளை அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஓர் அணியில் உள்ளன.

இந்நிலையில் ரஷிய துணை தூதர் அன்னா எவ்ஸ்டிக்னீவா கூறுகையில், “புதிய கூடுதல் தடைகள் வட கொரிய குடிமக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சமூக பொருளாதார மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளால் அச்சுறுத்தும்" என கூறினார்.

அதேசமயம் சீன தூதர் கூறுகையில், “நிலைமையை உறுதிப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கவும், உரையாடலை மீண்டும் தொடங்கவும் அமெரிக்கா கடினமாக உழைக்க வேண்டும்” என கூறினார்.

மேலும் பல கவுன்சில் உறுப்பினர்கள் வட கொரியாவிடம் ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில், இந்த நேரத்தில் பல தாக்குதல்களை உலகம் தாங்கிக் கொள்ள முடியாது, என்று கானா தூதர் ஹரோல்ட் அட்லாய் அக்யெமன் கூறினார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US