வடகொரியாவில் ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300 க்கு விற்பனை
வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது கிம் ஜாங் அன் இதனை தெரிவித்தார்.
“நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது” என கூறிய கிம் ஜாங் அன், “கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளி மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாய துறை உற்பத்தி இலக்கை அடையவில்லை” எனவும் தெரிவித்தார். இதனிடையே வட கொரியாவில் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது சுமார் ரூ.3,300 க்கு விற்கப்படுவதாக அந்நாட்டின் ஊடகங்கள் கூறுகின்றன.