வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி ; 15 வருடத்தின் பின் இராணுவ தளபதிகளுடன் அவசரக் கூட்டம்
தென் கொரியாவுடனான எல்லையை ‘அசைக்க முடியாத கோட்டையாக’ மாற்ற வேண்டும் என்று வட கொரிய ராணுவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா். 2011-ல் அவர் பத வியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டுக்கூட்டம் இதுவாகும்.
‘பரம எதிரியான’ தென் கொரியாவுக்கு எதிராக ராணுவம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்நாட்டு எல்லையில் உள்ள ராணுவப் படைகளைப் பலப்படுத்தும் திட்டங்கள் போரை முழுமையாகத் தடுப்பதற்கு மிகவும் அவசியம் என்று அவா் குறிப்பிட்டாா்.

மேலும், நவீன போா் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப ராணுவப் பயிற்சி மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை மறுவரையறை செய்ய வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
வட கொரிய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவு தளபதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜோங் உன் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.
கொரியாவைத் தன் முதன்மை எதிரியாக அறிவித்துள்ள வடகொரியா, கடந்த மார்ச் முதலே எல்லையில் ராட்சத சுவர்களை எழுப்பி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதி கிம் ஜாங் அன் தன் ராணுவ தளபதிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2011-ல் அவர் பத வியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டுக்கூட்டம் இதுவாகும்.