மனித உரிமைகள் ஆர்வலரை குறிவைக்கும் வடகொரிய அதிபர் கிம்! வெளியான அதிர்ச்சி தகவல்

North Korea human rights Kim Jong Un
By Sulokshi Apr 22, 2021 01:11 PM GMT
Report

 வட கொரியாவின் மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர், தாம் கிம் ஜாங் (Kim Jong Un) உன்னால் குறிவைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும் எந்த மிரட்டலுக்கும் தாம் அஞ்சப்போவது இல்லை எனவும், வட கொரியாவின் முகமூடியை கிழித்து அம்பலப்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆர்வலரான 27 வயது யியோன்மி பார்க் (Yeonmi Park) என்பவரே, தாம் கிம் ஜாங் உன்னால் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் துருக்கி தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளருக்கு நேர்ந்த அதே நிலை தமக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தமது தந்தையை கிம் ஜாங் நிர்வாகம் கைது செய்த நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு வட கொரியாவில் இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு யியோன்மி அங்கிருந்து தப்பி தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் வசித்துவரும் அவர் கிம் ஜாங் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.

வட கொரிய மக்களின் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்ட தமக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் உறுதி என குறிப்பிட்டுள்ள யியோன்மி (Yeonmi Park), பல முறை தாம் ஊடுரவப்பட்டு, கிம் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பல ஆண்டுகளாக இது தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தமது உறவினர்கள் ஒவ்வொருவராக கிம் நிர்வாகம் தண்டித்தது எனவும், இது மூன்று தலைமுறை அல்லது 8 தலைமுறை வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமது மொத்த குடும்பத்தினரும் சிறையில் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டுள்ளனரா என்பது தமக்கு தெரியாது, ஆனால் அவர்கள் அனைவரும் கொடூரமாக பழிவாங்கப்பட்டதாக யியோன்மி (Yeonmi Park)  தெரிவித்துள்ளார்.

இதேவேளை 1993 காலகட்டம் முதலே, வட கொரிய அரசாங்கம் பொதுமக்களுக்கு உணவளிப்பதை நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ள யியோன்மி, இதனால் 1995 முதல் 1998 வரையான காலகட்டத்தில் 3 மில்லியன் வட கொரிய மக்கள் மரணமடைந்துள்ளதாகவும், இது மனிதனால் உருவாக்கப்பட்ட வரலாற்றின் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வாடிக்கை என குறிப்பிட்டுள்ள யியோன்மி 9Yeonmi Park), அவை அனைத்தும் சிறார்கள் முன்னிலையில் நடத்தப்படும் எனவும், அவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வட கொரிய மக்களுக்கே தமது சொந்த நாட்டில் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வரும் அனுமதி இல்லை என்றும் யியோன்மி தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US