ஒலிம்பிக் போட்டியில் இம்முறை அவ்வளவு நெருக்குதல் இல்லை! வெற்றியாளர் தெரிவிப்பு
இம்முறை தமக்கு ஒலிம்பிக் போட்டியில் அவ்வளவு நெருக்குதல் இல்லை என ஒலிம்பிக் நீச்சல் வெற்றியாளர் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) தெரிவித்துள்ளார்.
CNA-வுக்கு டோக்கியோவில் இருந்து பேட்டி கொடுத்த போது ஸ்கூலிங் இதனைத் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக நீச்சல் போட்டியில் தாம் பல வெற்றி, தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் இம்முறை தம்மால் முடிந்த அளவு போட்டியில் திறமையை வெளிக்காட்டவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"போட்டியில் வெற்றி பெறுவதுதான் இலக்கு, பதக்கம் கிடைத்தால் மகிழ்ச்சி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இம்முறை களமிறங்குகிறேன் எனவும் 26 வயது ஸ்கூலிங் கூறினார்.
மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி, போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) ஜூலை 27ஆம் தேதி ஸ்கூலிங் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியின் தேர்வுச் சுற்றில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இதேவேளை சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்தவர் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) ஆவார்.
2016 ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியை 50.39 வினாடிகளில் முடித்து அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.