கனடாவை உலுக்கிய இந்திய மாணவர் கொலை: வெளியான தீர்ப்பு
இந்திய மாணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் நோவா ஸ்கொடியா இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நோவா ஸ்கொடியாவின் Truro பகுதியில் கடந்த 2021ல் நடந்த இச்சம்பவத்தில் Cameron James Prosper என்ற 21 வயது இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மாணவர் 23 வயது பிரப்ஜோத் சிங் கத்ரி சம்பவத்தன்று கனேடியரான Prosper என்பவரால் கத்தியால் தாக்கப்பட்டார்.
கத்ரியின் கழுத்தில் கத்தி பாய்ந்ததாக கூறப்படுகிறது. தமது நண்பரின் குடியிருப்பில் இருந்து வாகனம் அருகே செல்லும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும் Prosper மற்றும் கத்ரி ஆகிய இருவரும் அறிமுகமே இல்லாதவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை என்றே சட்டத்தரணிகளால் கூறப்படுகிறது. மேலும், வெறுப்பு அல்லது இனவாத ரீதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
அறிமுகமே இல்லாத இருவர் விரோதம் காரணமாக தாக்குதலுக்கு இலக்காகியிருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் கத்ரியை தாக்கிவிட்டு, அதே பகுதியில் இருக்கும் அவரது நண்பர்கள் குடியிருப்பு Prosper சென்றுள்ளதாகவும், அவர்களே பொலிசாருக்கு இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அளித்துள்ளனர்.
சுமார் 2 மணியளவில் கத்ரி தாக்குதலுக்கு இலக்கான நிலையில், 3 மணியளவில் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்த வழக்கில் Prosper-க்கு உதவியதாக அவரது நண்பர்கள் இருவருக்கும் தண்டனை விதித்துள்ளது.