அரசாங்கம் மழை தெய்வத்தின் அருளை வேண்டி நிற்கிறது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மழை தெய்வத்தின் அருளை வேண்டி நிற்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது தரப்பிற்கு எதிராக பல்வேறு சேறு பூசல்களையும் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணித்து அணி திரண்டு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்களில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வானத்தைப் பார்த்து மழை பெய்யாதா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தை குழப்புவதற்கு வேறு வழி இல்லாததனால் இவ்வாறு மழை தெய்வத்தை அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என உதய கம்மன்பில சுட்டிக்காட்டி உள்ளார்.
ஓராண்டு காலத்தில் இந்த அரசாங்கத்தின் பொய்களை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, பொய்யர் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டமை குறித்து நாம் உண்மையில் மகிழ்ச்சி அடைகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொய்களை 69 லட்சம் மக்கள் நம்பி இருந்தனர் இன்று அவர்களில் எத்தனை பேர் இதனை புரிந்து கொண்டார்கள் என்பது நுகேகொட கூட்டத்தை பார்த்தால் தெரியும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.