டொரொண்டோவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது
டொரொண்டோ நகரில் மூன்று கத்தி குத்துச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு ஆண் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முதல் சம்பவம் மார்ச் 23-ஆம் திகதி, இரவு 11:45க்கு, சிம்கோவின் தெரு மற்றும் பிரெம்னர் புலவிட் அருகே இடம்பெற்றுள்ளது.
ஒரு ஆண் தூங்கிக் கொண்டிருந்தவரை அணுகி அவரை கத்தியால் குத்தி, அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார் எனவும் பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் 28ம் திகதி இரவு 9 மணியளவில், தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவரின் மீது வேறு நபர் திடீரென பின்னாலிருந்து கத்தியால் குத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது தாக்குதல் சனிக்கிழமை, இரவு 10:50 மணிக்கு, கிங் ஸ்ட்ரீட் மேற்கு மற்றும் யோர்க் ஸ்ட்ரீட் அருகே நடந்தது. இந்த சம்பவத்தில், ஒருவர் ஒரு கட்டிடத்திற்கு வெளியே நிற்கும்போது சந்தேகநபர் அவரை பின்னாலிருந்து தாக்கி, ஓடி விட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
23 வயது டங்கன் மேகென்சி, என்ற நபரை இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.