வயதானவர்களால் பிரச்சினைகள் ஏற்படுகிறது ; ட்ரம்பை கலாய்த்த ஒபாமா
உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்கள் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படுகிறது’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியிருப்பது பரபரப்பாகி உள்ளது.
பாரக் ஒபாமா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அளித்த பேட்டி ஒன்றில் 77 வயதான தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரம்பின் கொள்கைகள், அறிவிப்புகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பாதகமான முடிவு
ஒபாமா பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதான ஆண்கள் அதிகாரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் ஏற்படுகிறது. பிரமிடுகள் உட்பட எல்லாவற்றிலும் தங்கள் பெயரை பொறிக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்படுகிறார்கள். மரணத்திற்கும், முக்கியத்துவமின்மைக்கும் அஞ்சுகிறார்கள்.
தங்கள் கவனிக்கப்படாமல் போய்விடுமோ, தங்களைப் பற்றி எதிர்காலம் பேசாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே பல பாதகமான முடிவுகளை எடுக்கின்றனர்.
அமெரிக்காவை குறிப்பிட்ட சிந்தனையை நோக்கி திசை திருப்ப பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் ‘நாம், நமது மக்கள்’ என பேசுவது சில மக்களை மட்டுமே. எல்லா மக்களையும் அவர்கள் குறிப்பிடவில்லை.