சீனாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்ய 9 நாடுகளுக்கு சலுகை!
சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.
இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.
இந்தவகையில் ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் வருகிற 30-ம் திகதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.