கனடாவில் கொள்ளையை தடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை!
கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறு காயத்திற்கு உள்ளானதாகவும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நோர்த்யோர்க் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சில சந்தேக நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர்களை இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தடுக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடையொன்றில் இருந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் காரில் தப்பி சென்றதாகவும் இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகி பின்னர் அங்கிருந்து அவர்களது காரை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.