வாக்களிக்க வந்த பிரித்தானிய முன்னாள் பிரதமரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
வாக்களிப்பதற்காக உள்ளூர் வாக்குச்சாவடிக்கு வந்த பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனை வாக்களிக்கவிடாமல் அதிகாரிகள் திரும்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர மறந்ததால், அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க தனது உள்ளூர் வாக்குச் சாவடிக்குச் சென்ற போரிஸ் ஜான்சன்vaa இந்தச் சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட அவர், பின்னர் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்களித்தார்.
பிரித்தானிய பிரதமராக அவர் இருந்த போதே 2022 இல் வாக்களிக்க அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஐடியை கொண்டுவர வேண்டும் என்ற சட்டத்தையும் இயற்றியமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தையடுத்து X தளத்தில் பலர் வாக்காளர் அடையாள விதியை அறிமுகப்படுத்திய அவரே தன்னை மறந்துவிட்டார் என பதிவிட்டுள்ளனர்.