ஈரான் - அமெரிக்க போரின் எதிரொலி: தங்கம், எண்ணெய் விலைகளில் திடீர் மாற்றம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் மதிய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 78 டாலராக பதிவாகியிருந்தது.

இதேவேளை, சர்வதேச நேரப்படி (GMT) மாலை 15:00 மணி நிலவரப்படி, தங்கத்தின் விலை சுமார் மூன்று சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,005.59 டொலராக வர்த்தகமானது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் சர்வதேச சந்தை நிலைமைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.